இல்லற வாழ்விற்கு இடையூறு! குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்! தாய் 2வது கணவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!

புழல் அருகே இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகளையே தாய் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

வியாசர்பாடி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (27),இவருக்கும் பவானி (24), என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் தற்போது அவர்களுக்கு யாழினி (3), என்ற மகளும் ரமேஷ் (1)என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவானி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில் ஒருநாள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஆத்திரமடைந்த ரமேஷ் பவானியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்நிலையில் பவானி அவரிடமிருந்து பிரிந்து புழல் கண்ணப்பசாமி நகரில் தனது 2 குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆசிப்(25), என்பவருக்கும் பவானிக்கும் நட்பு மலர்ந்துள்ளது. இந்நிலையில் அந்த நட்பு நாட்கள் செல்ல செல்ல கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் பவானி ஆசிப் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இருவரும் திருமணம் செய்துகொண்டு பல நாட்கள் ஒன்றாக இருந்துள்ளனர். திடீரென தனது மூத்த மகள் யாழினி இறந்து விட்டதாக ரமேஷுக்கு தகவல் சென்றுள்ளது. இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது யாழினி இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். மற்றும் தனது மகளின் இறப்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு உடலை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதை உறுதி செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் பவானி மற்றும் ஆசிப் என்பவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.  

காவல்துறையினரின் கேள்விகளுக்கு முன்னும் பின்னுமாக பதிலளித்த பவானி கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.இந்நிலையில் அவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தங்களது இல்லற வாழ்க்கைக்கு குழந்தை தடையாக இருந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலைக்குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.