பொம்பள பிள்ளை..! எருக்கம் பால் ஊத்துனோம்..! செத்துப்போச்சி..! போலீசை அதிர வைத்த பெற்ற தாயின் வாக்குமூலம்! உசிலம்பட்டி பரபரப்பு!

மதுரை மாவட்டத்தில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தாயே எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டம் செக்கானூரணியை சேர்ந்தவர் வைரமுருகன் மற்றும் இவரது மனைவி சௌமியா (24) கணவன் மனைவி இருவரும் அதே பகுதியில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சௌமியா கர்ப்பமாக இருந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் அவர்களுக்கு மற்றுமொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் உறவினர்கள் அனைவரும் இரண்டு பெண் குழந்தைகளை வைத்து சமாளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும் என பேசியுள்ளனர். இதனால் மிகுந்த மன வருத்தம் அடைந்த தம்பதியினர் இரண்டாவது பெண்குழந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து குழந்தைக்கு எருக்கம்பாலை கொடுத்துள்ளனர். பாலை குடித்த குழந்தை சில மணி நேரத்தில் இறந்து போனது.இதையடுத்து கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு வெளியே உள்ள வேப்பமரத்தடியில் குழிதோண்டி குழந்தையின் உடலை புதைத்துள்ளனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் குழந்தை எங்கே என கேட்டபோது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரை விசாரித்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணையில் சௌமியா குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து குழந்தையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்துள்ளனர் என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து சௌமியாவிடம் கேட்டபோது அவரும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது மிகவும் சிரமம் என்பதால் தான் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்திருந்தோம் ஆனாலும் அதுவும் பெண் குழந்தையாக பிறந்ததால் மிகுந்த விரக்தியடைந்து குழந்தையை கொன்று விட்டதாக காவல்துறையினர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குழந்தையை வேறு யாருக்கும் கொடுக்க மனம் இல்லாததால் கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதே சமயத்தில் தமிழகத்தில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது உசிலம்பட்டியை சேர்ந்த தம்பதியறுக்கு பெண்குழந்தை பிறந்து 18 நாட்களே ஆன நிலையில் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் மறுபடியும் பெண் சிசுக்கொலை அதிகம் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.