அழகு மகள்கள் 2 பேரை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்! பிறகு எடுத்த விபரீத முடிவு! பதற வைக்கும் காரணம்!

திருவண்ணாமலை மாவட்டம் அருகே குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே குடும்ப பிரச்சினையால் இரண்டு மகள்களையும் கொன்றுவிட்டு தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் இவர் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் .

அவரது மனைவி செவ்வந்தி ஜெயச்சந்திரன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் இவர்களுக்கு இடையே  அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது இந்நிலையில் சிவந்தி அடிக்கடி கோவித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வது வழக்கம் .

இந்த முறையும்  இருவருக்குமிடையே  குடும்ப தகராறு முற்றிய நிலையில் செவ்வந்தி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் . ஜெயச்சந்திரன் அங்கு சென்று அவர்களை அழைத்து போது தனது வீட்டிற்கு வர மறுத்துள்ளார் செவ்வந்தி. இதையடுத்து திரும்பவும் அவர்களுக்கிடையே தகராறு வெடித்துள்ளது.

இதனால் மனமுடைந்த செவ்வந்தி தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது மகள்கள் மதுஸ்ரீ, தனுஸ்ரீ ஆகியோரை கழுத்தை நெரித்து கொன்று விட்டு செவ்வந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலறிந்து வந்த கடலாடி போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.