15 வயதில் செய்யக்கூடாததை செய்த மகள்! மகனுடன் சேர்ந்து தாய் எடுத்த கொடூர முடிவு!

காதல் செய்த குற்றத்திற்காக, 15 வயது சிறுமியை அவரது குடும்பத்தினரை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.


காசியாபாத் நகரில் 15 வயதான சிறுமி ஒருவர், தனது விதவைத் தாய் மற்றும் 17 வயது அண்ணனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு, ஒரு இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதன்பேரில், அந்த நபர் அடிக்கடி சிறுமியை வீடு தேடி வந்து சந்தித்து சென்றுள்ளார். இதனால், சுற்றுப்புறத்தில் தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதாக நினைத்து, சிறுமியின் தாய், கடந்த 3 மாதங்களில், அடிக்கடி வசிப்பிடத்தை மாற்றி வந்துள்ளார்.

இதுவரை அவர்கள் 7 வாடகை வீடுகளுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 3 நாட்கள் முன்பாக, காசியாபாத் பகுதிக்கு புதிய வீட்டில் குடியேறியுள்ளனர். ஆனால், அங்கேயும் அந்த சிறுமி, தனது காதலனை அழைத்து வர தொடங்கியிருக்கிறார். இதனால், ஆத்திரம் அடைந்த தாயும், சிறுமியின் அண்ணனும் சேர்ந்து, அவரை கழுத்தை நெரித்துக் கொன்றனர்.

பின்னர், உடலை ஒரு மூட்டையில் வைத்து, ஸ்கூட்டியில் தள்ளிச் செல்ல முயன்றுள்ளனர். சந்தேகமடைந்த அண்டை வீட்டினர் அவர்களை மறித்து பார்த்தபோது, சிறுமியின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசாருககு தகவல் தெரிவித்ததும், அவர்கள் விரைந்து வந்து, தாய், மகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.