கள்ளக்காதலன் மீது தீராத ஆசை! பெற்ற குழந்தைக்கு காம வெறி பிடித்த தாயால் நேர்ந்த விபரீதம்!

காசியபாத்: பெற்ற மகளை தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம், நிவாரி போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட அபுபூர் பகுதியில் வசிப்பவர் ருக்‌ஷார். இவருக்கு கடந்த மாதத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தையை  பார்க்க, அவரது கணவர் வரவில்லை எனக் கூறப்படுகிறது. பிரசவம் முடிந்த பிறகு, கணவரின் சகோதரர் வீட்டில் அந்த பெண் சில நாட்கள் வசித்து வந்திருக்கிறார். பின்னர், திடீரென கடந்த திங்கள்கிழமை சிலருடன் வந்த அப்பெண், குழந்தையை தனது கணவரிடம் கொடுத்து விடும்படி சொல்லியுள்ளார். 

இது அவரின் கொழுந்தனாருக்கு சந்தேகம் ஏற்படுத்தவே, ஏன், எதற்கு என்று கேட்டுள்ளார். அப்போது, அந்த பெண், தாய் வீட்டிற்கே செல்வதாகவும், கணவருடன் குடும்பம் நடத்த விரும்பவில்லை எனவும் கூறியிருக்கிறார். இதுபற்றி அவரின் கணவருக்கு தகவல் தெரிவிக்க, அவரும் விரைந்து வந்துள்ளார்.

நீண்ட வாக்குவாதத்திற்குப் பின், குழந்தையும், தாயும் ஒன்றாகத்தான் வர வேண்டும், குழந்தையை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என கணவன் வீட்டார் கூறியுள்ளனர். ஆனால், அந்த பெண், திடீரென குழந்தையை கழுத்து நெரித்துக் கொன்றுவிட்டு, தனது தாய்வீட்டுக்கு தப்பியோடிவிட்டாராம். 

இதுபற்றி அவரது கணவன் உள்ளிட்டோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  குறிப்பிட்ட பெண்ணிற்கு ஏதேனும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்றும்,  அதனால் கணவரையும் ,குழந்தையையும் அவர் கைகழுவ முயற்சித்திருக்கலாம் என்றும் போலீசார் குறிப்பிடுகின்றனர்.