மகளுக்கு கழுத்தில் மிதி..! தம்பிக்கு மண்டையில் அடி..! நள்ளிரவில் பெண் போட்ட வெறியாட்டம்! கோவை பரபரப்பு!

கோவை: குழந்தையை மிதித்துக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீ காமாட்சி நகரை சேர்ந்த வேதவள்ளி (41 வயது) என்பவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் வேலை செய்து வந்த வேதவள்ளியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழக்கவே, வேதவள்ளி குழந்தையுடன் மீண்டும் தாய் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார். அங்கு பெற்றோருடன் வசித்து வந்தாலும், அவ்வப்போது வேதவள்ளிக்கு மனநலக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதற்காக, மருத்துவ சிகிச்சை தந்தாலும், சரியாகவில்லை எனக் கூறப்படுகிறது.  

இதனால், மனநலக் கோளாறு ஏற்பட்டு மிக மூர்க்கமாக வேதவள்ளி நடந்துகொள்வாராம். இந்நிலையில், நேற்றிரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தபோது வேதவள்ளிக்கு மனப் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இதில், கையில் கிடைத்த பொருட்களை அடித்து நொறுக்கியதோடு, தனது தந்தை, தம்பியையும் அடித்து உதைத்துள்ளார். அவர்கள் வேதவள்ளியை கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில் திடீரென கீழே படுத்திருந்த மகளின் கழுத்திலேயே காலை வைத்து வேதவள்ளி மிதித்திருக்கிறார். இதில் நிகழ்விடத்திலேயே குழந்தை இறந்துவிட்டது.  

பிறகு மனநிலை சரியானதும் இந்த உண்மை தெரிந்து வேதவள்ளி மேலும் குழப்பம் அடைந்திருக்கிறார். உடனடியாக, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.