தாயின் தகாத உறவு! கண்டுபிடித்த மகன் கத்தியை எடுத்து செய்த பயங்கரம்!

தகாத உறவு வைத்திருந்ததாக தாயை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த மகன், தாய் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


தர்மபுரி பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதிபுரத்தில் ராஜா என்பவர் வசித்து வந்தார். இவர் இரவு அப்பகுதியில் வந்து கொண்டிருக்கையில் எதிரே வந்த கௌதம் என்பவர் சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற பிறகு, வீட்டிற்குச் சென்று தாயையும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்து தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து தாயையும் மகன் கௌவுதமையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து கௌதமை விசாரிக்கையில், ராஜா என்பவர் கௌதமின் தாய் திலகவதியுடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த கௌதம் திட்டமிட்டு ராஜாவை கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. 

கத்தியால் குத்தப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் இவர் தனது மனைவியுடன் நீண்ட காலமாக பிரிந்து வாழ்ந்து வந்ததும் இந்த பிரிவின் போது திலகவதி யுடன் தகாத உறவில் இருந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. 

இது குறித்து வழக்கு பதிவு செய்து கௌதமிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.