மகளை காதலித்து ஏமாற்றிய இளைஞனை கடத்திய வீரத் தாய்! பிறகு நடந்த பரிதாபம்!

சென்னையில் கடந்த சனிக்கிழமை அன்று தனது மகளின் காதலுக்காக அவளது காதலனை தனது உறவினர்களுடன் சேர்ந்து கடத்திய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்


கிருஷ்ணராஜ் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணின் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும். கூடிய விரைவில் திருமணம் செய்யப்போவதாக கிருஷ்ணராஜ் கூறியுள்ளார்.

நாட்கள் செல்லச் செல்ல திடீரென கிருஷ்ணராஜ் அந்தப் பெண்ணிடம் பேசுவதை குறைத்து கொண்டதாக தெரிகிறது. பின்னர் சந்திப்பதையும் குறைத்துக்கொண்டார் கிருஷ்ணராஜ். இதனால்  விரக்தி அடைந்த அந்த பெண் தனது பெற்றோரிடம் தனது காதலன் இவ்வாறு நடந்து கொள்வதாக தெரிவித்தார்.

அந்தப் பெண் அவனிடம் காரணத்தைக் கேட்டபோது அவன்  அந்தப் பெண்ணுக்கு மற்றொருவருடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார் . அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அதனை தனது  தாயிடம் கூறியுள்ளார்.  இதனை தனது மகளின் மூலமாக கேட்டு தெரிந்து கொண்ட தாய் அவரை கடத்த முடிவு செய்தனர்.

அதற்காக  தனது இரு உறவினர்களையும்  இந்த கடத்தல் திட்டத்தில் இணைத்துக்கொண்டார் கவிதா .தாய் கவிதா மகளின் காதலன் கிருஷ்ணனிடம் தனது மகள் கடைசியாக உங்களிடம் ஏதோ பேச வேண்டும் என்று அழைத்து அவரை அருகில் உள்ள கோவிலுக்கு வரும்படி கூறியுள்ளனர். அவரின் அழைப்பை ஏற்று அங்கு வந்த கிருஷ்ணராஜ்  கோவிலில் அவர்களை சந்திக்க முடிவெடுத்துள்ளனர்.

கிருஷ்ணராஜ் தனது நண்பரான வசந்தகுமார் உடன் அங்கு வந்துள்ளார். அங்கு வந்த கிருஷ்ணராஜ் இடம் அந்தப் பெண் தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு கிருஷ்ணராஜ் ஒப்புக்கொள்ளவில்லை அதனை தொடர்ந்து உறவினர்களுடன் சேர்ந்து கிருஷ்ணராஜை கடத்தியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேட தொடங்கினார். நீண்ட நேரத்திற்குப் பிறகு அவர்களைத் தொடர்ந்து சென்ற திருவொற்றியூர் போலீசார் மணலி அருகே அவர்களை கைது செய்தனர்.