கைம்பெண்ணை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம்! நான்கு இளைஞர்களின் கொடூர செயல் - புதுவை அதிர்ச்சி

புதுச்சேரியில் சந்தையில் காய்கறி வாங்கச் சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று நான்கு இளைஞர்கள் கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


 புதுச்சேரி அடுத்த காரைக்கால் பகுதியில் கணவனை இழந்த கைம்பெண் ஒருவர்  அப்பகுதியில் உள்ள சந்தையில் காய்கறிகளை விற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்த இவர் மகனுடன் வசித்து வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் நேற்று காலை புதுச்சேரியில் மிகப்பெரிய சந்தை இருக்க கூடிய பரவை சந்தையில் காய்கறி வாங்கி விட்டு திரும்ப பஸ் ஏறுவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

அப்பொழுது  அவ்வழியாக காரில் வந்த 4 இளைஞர்களை  அவரின் வாயை பொத்தி வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றனர். பின் இருட்டாக இருக்கும் ஓர் இடத்தில் காரை நிறுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவரிடமிருந்த 6,000 ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.

நடந்த இன்னல்களை வெளியில் சொல்லத் தயங்கிய அப்பெண் மகனிடம் பணம் மற்றும் நகை காணாமல் போனதாக பொய் கூறிவிட்டார். இதையடுத்து மகன் தாயாரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார். நடந்ததை கூறுமாறு காவல்துறையினர் கேட்க காவல்துறையினரிடமும் அதே பொய்யை கூறியுள்ளார்.

சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொள்கையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெண் நின்று கொண்டிருந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் பெண்ணைக் கடத்தியதற்கு பயன்படுத்தப்பட்ட காரை கண்டறிந்து அதன் மூலம் விசாரணை தொடங்கப்பட்டது.

மேற்கொண்ட விசாரணையில் விஜய் ரமேஷ் உள்ளிட்ட இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்  மேலும் தலைமறைவாகியுள்ள மற்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.