மகன் ராணுவத்தில்..! மருமகளுக்கு தகாத உறவு! கண்டுபிடித்த மாமியார்..! அப்போது வீட்டுக்குள் வந்த பாம்பு! நெஞ்சை உலுக்கி எடுக்கும் சம்பவம்!

இரவு பகல் பாராமல் எல்லையில் மகன் நாட்டை காக்க, முறையற்ற உறவை தேடி சென்றதை கண்டித்ததால் மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் தாயார் வீட்டில் வசித்து வருகின்றனர். ராணுவத்தில் இருக்கும் வீரர் எல்லையில் இரவு பகல் பாராமல் நாட்டை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கணவர் அருகில் இல்லாததால் வேறு ஒரு நபருடன் முறையற்ற வாழ்வு வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

அடிக்கடி இருவரும் போனில் பேசிக் கொள்வதும் பின்னர் அவரை வீட்டிற்கே அழைத்து மருமகள் உல்லாசமாக இருப்பதுமாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயம் அறிந்த மாமியார், மருமகளை கண்டித்துள்ளார் மாமியார் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மருமகள் அவரை பரலோகம் அனுப்ப முடிவு செய்தார்.

கொலை செய்தால் சிறைக்கு சென்றுவிடுவோம் என்பதால் பாம்பு வைத்து கடிக்கச் செய்து கொலை செய்துள்ளார். ஆனாலும் அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணின் நடவடிக்கைகள் தெரியும் என்பதால் அவரது மாமியாரின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து மருமகளிடம் சரியான முறையில் விசாரிக்க அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவரும், அவரது கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் சாப்பிடுவதற்கு களி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.