மருமகன் மண்டையை கோடாரியால் பிளந்த மாமியார்! அதிர வைக்கும் பகீர் காரணம்!

பெற்ற மகளை தினமும் குடித்து விட்டு அடித்த மருமகனை கோடாரியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.


இமகுண்டலம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் அங்கண்ணகாரிபல்லி கிராமத்தை சேர்ந்த அங்கம்மாவுக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் 9 வயது மகள் உள்ளார். இந்நிலையில் குடிபழக்கத்துக்கு அடிமையான ரமேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி குழந்தையை அடித்துக் கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

வேதனை தாங்காத அங்கம்மா இதுகுறித்து தனது தாயார் பெத்த அக்காவிடம் தெரிவித்தார். இதையடுத்து  தனது மகள் குடும்பத்தை தனது கிராமத்துக்கே அழைத்துச் சென்ற பெத்த அக்கா அங்கிருந்து வேலைக்குச் செல்லுமாறு மருமகனிடம் தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்து வேலைக்குச் சென்ற ரமேஷ், தனது மாமியாரின் அறிவுரையைக் கேட்டு சில மாதங்கள் மது அருந்தாமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மீண்டும் குடித்துவிட்டு தனது மனைவியிடம் தினமும் தகராறு செய்த ரமேஷை பெத்த அக்கா கண்டித்த நிலையில் ரமேஷ் திருந்தவில்லை. நேற்று முன்தினம் மாலை ரமேஷ் குடித்துவிட்டு மாமியார் கண்ணெதிரிலேயே மனைவியை அடித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த  பெத்த அக்கா வீட்டில் இருந்த கோடாரியால் ரமேஷை சரிமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் ரமேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் , பெத்த அக்காவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.