மருமகனின் மண்டையை உடைத்த மாமியார்... உதவி செய்த மனைவி - பேரையூர் பஞ்சாயத்து

குடும்பத்தகராறு காரணமாக தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை குடும்பம் நடத்த தனது வீட்டிற்கு திரும்ப அழைக்க சென்ற கணவனை மனைவி மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து கட்டையால் அடித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பேரையூரை அடுத்த பெருங்காமநல்லூர் பரிய சேர்ந்தவன் செல்வேந்திரன் இவருக்கும் வரலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவது சாதாரணமான ஒன்றாகும். இந்நிலையில் ஆத்திரமடைந்து வரலட்சுமி அடிக்கடி அவரது தாயார் வீட்டுக்கு சென்று வருவது இயல்பான செயலாகும் அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரலட்சுமி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பத்து நாட்கள் சென்ற நிலையில் தேவேந்திரன் தனது மனைவியை அழைத்து வர மாமியாரின் வீட்டிற்கு சென்றபோது அங்கு சென்று தனது மனைவியிடம் தன்னுடன் குடும்பம் நடத்தவா என அழைத்துள்ளார். அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த வரலட்சுமி தனது தாயிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அவரது தாய் வைரசிலை என் மகளை உன்னோட அனுப்ப முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் நிலவியது இந்நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் வரலட்சுமி வீட்டில் இருந்தவர்கள் தேவேந்திரனை தாக்க ஆரம்பித்துள்ளனர். அருகிலிருந்த கட்டையை எடுத்து தேவேந்திரனின் மண்டையில் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த தேவேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வைரசிலை மற்றும் வரலட்சுமி, அவரது உறவினரான சிவமாயன் என்ற மூன்று 3 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.