மகாராஷ்டிராவில் காவல் ஆய்வாளரான கணவரின் கள்ளக்காதலை மாமியார் தட்டிக் கேட்காததால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
அவன் அப்படித்தான்! அட்ஜஸ்ட் பண்ணிக்கோ! மருமகளுக்கு மாமியாரின் விவகாரமான அட்வைஸ்! பிறகு நேர்ந்த விபரீதம்!

காவல் ஆய்வாளராக பணிபுரிம் அதிஷ் பாபுராவ் கடந்த பிப்ரவரி மாதம் ஜோதி என்பவரை கரம்பிடித்தார். இந்நிலையில் கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஜோதி அவருக்கு ஏற்கனவே அவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதையும் அது தற்போது தொடர்வதையும் கண்டுபிடித்தார்.
இதுகுறித்து மாமியாரிடம் ஜோதி தெரிவித்தபோது, “அவன் ஆம்பளை எது வேண்டுமானாலும் செய்வான். நீதான் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவேண்டும்” என கூறியது ஜோதிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி தாய் வீட்டிற்கு சென்று விட்டார் ஜோதி. நீண்ட நாட்கள் ஆகியும் கணவர் வீட்டார் ஜோதி குடும்பத்தாரிடம் சமரசம் பேசாததால், ஜோதி வீட்டாரே இறங்கி வந்து அதிஷ் வீட்டில் சமாதானம் பேசி உள்ளனர்.
பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் அவ்வப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரும், மாமியாரும் சேர்ந்து ஜோதியை கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். இந் நிலையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஜோதி தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் வீட்டில் சென்று பார்த்தபோது இறந்து போன ஜோதியின் உடலை தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு அழுவது போல் அதிஷ் நாடகம் ஆடினார். இதை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கணவர் அதிஷை கைது செய்தனர்.