வேறொரு ஆணுடன் நெருக்கமாக இருந்த தாய்! நேரில் பார்த்த மகனின் கொடூர செயல்!

சென்னை வண்டலூர் பகுதியில் தனது தாய் ,தந்தை இறந்த பிறகு வேறொரு ஆணுடன் வாழ்ந்து வந்தது பிடிக்காத மகன் அவரை கம்பியால் குத்தி கொலை செய்துள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் உள்ள மண்ணிவாக்கம் கக்கன் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் பவானி, இவரது கணவர் அன்பு ,இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அன்பு இதய நோய் காரணமாக இறந்துவிட்டார். நாட்கள் செல்லச் செல்ல சோமுமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் பவானிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளனர்.இது அவரது மூத்த மகனான சம்பத்குமாருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.எனவே பவானி இரு மகன்களையும் பிரிந்து ராஜ்குமாருடன் தனிமையில் வசித்து வந்துள்ளனர். அதன் பிறகு அவர்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை.

இந்நிலையில் மண்ணிவாக்கம் பகுதியில் பவானி தனது கள்ளக் காதலன் ராஜ்குமாருடன் வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் பவானியின் மகன் சம்பத் குமாரும் இருந்துள்ளார். பொது இடம் என்றும் பாராமல் பவானியும் - ராஜ்குமாரும் சற்று நெருக்கமாக சிரித்தபடி இருந்துள்ளனர். இதனை பார்த்து சம்பத்திற்கு கோபம் வந்துள்ளது.

பெற்ற மகன்களான தங்களை பிரிந்து கள்ளக் காதலனுடன் தாய் இருப்பதை சம்பத்தால் ஏற்க முடியவில்லை. இதனால் அவர் தனது தாயுடன் சென்று தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சம்பத்குமார் அருகில் இருந்த கம்பியை எடுத்து பவானியின் தலை மற்றும் வயிற்றில் பலமாக தாக்கியுள்ளார்.

பவானியின் வயிற்றில் கம்பி ஆழமாக பாய்ந்ததால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க வந்த ராஜ்குமாருக்கும் பலத்த காயங்களுடன் ராஜ்குமார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.