பிறந்த வீட்டில் கடைசி முறை! மகளை மூச்சு முட்ட முட்ட வைத்து புகுந்த வீட்டுக்கு அனுப்பிய தாய்!

வட நாட்டில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமேடையில் மகளுக்கு ஆசையா பானி பூரி ஊட்டும் தாய் அதை சாப்பிடும் மணப்பெண் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைராலாகும் வருகிறது.


எவ்வளவு தான் பெற்றோர்கள் ஆசையாக, பாசமாக பெண் பிள்ளைகளை வளர்த்தாலும், ஒரு நாள் அவர்கள் புகுந்த வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அந்த வகையில், வட மாநிலங்களில் நடந்த நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வட இந்தியாவில் அதிகமாக விரும்பி சாப்பிடப்படும் உணவு பானி பூரி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்ண கூடிய ஒரு உணவு என்பதால் எங்கு சென்றாலும் எதாவது ஒரு மூலையில் யாரேனும் பானி பூரி விற்றுக்கொண்டு இருப்பர்கள்.

இந்நிலையில், வட இந்தியாவில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில், திருமணமான மணப்பெண், மாப்பிள்ளை வீட்டுக்கு செல்வதற்குமுன் உறவினர்களின் முன்னிலையில் அமர்ந்து பானி பூரியை விரும்பி சாப்பிடுகிறார். அவருக்கு பானி பூரி பிடிக்கும் என்பதால் அவரது தாய் வீட்டில் பானி பூரியை ஆசை தீர சாப்பிட வைத்து அனுப்பி வைத்துள்ளார்.

இந்த அழகிய காட்சிகளை படம் பிடித்து, இணையத்தில் வெளியீட்டு உள்ளார்கள். இதனை கண்ட இணையவாசிகள் மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.