வீங்கிய வயிறு..! உயிருக்கு போராடிய குழந்தை..! தன் உறுப்பில் பாதியை கொடுத்து காப்பாற்றிய தாய்..! நெகிழ்ச்சி சம்பவம்!

லண்டன்: தனது கல்லீரலில் ஒரு பகுதியை தானம் செய்து, மகனை காப்பாற்றிய தாய் பற்றிய செய்திதான் இது...


சவுத்போர்ட் பகுதியை சேர்ந்தவர் தீயணைப்பு வீரர் ஜோனாதன் ரோஸ்கோ. இவரது மனைவி டேனியல். சமீபத்தில், டேனியல் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அச்சிறுவனுக்கு ஓடிஸ் எனப் பெயரிட்ட நிலையில், அவனுக்கு பிறவியிலேயே மஞ்சள் காமாலை ஏற்பட்டு, கல்லீரல் சீர்கெட்டு விட்டதாக தெரியவந்துள்ளது.

இதனால், சிறுவனின் கல்லீரலை மாற்றி புதிய உறுப்பை பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இல்லை எனில், சிறுவன் ஓடிஸ் உயிரிழந்துவிடுவான் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கல்லீரல் உறுப்பு தானம் கேட்டு, டேனியல் தம்பதியினர் பல வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால், ஒருவரும் உதவ முன்வர வில்லை.  

இதையடுத்து, டேனியல் தனது கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக அளித்து, தனது மகனை காப்பாற்ற முன்வந்தார். இதன்படி, மருத்துவர்களும் உரிய அறுவை சிகிச்சை செய்து, சிறுவன் ஓடிஸை காப்பாற்றியுள்ளனர். உதிரம் கொடுத்த காப்பாற்றிய தாய் என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம், அதனை கண்முன்னே நிரூபித்துக் காட்டும் வகையில் செயல்பட்ட டேனியலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தற்போது, டேனியல் தம்பதியினர் கிறிஸ்துமஸை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.