என் மகளை போதைக்கு அடிமையாக்கி மதம் மாற்றிவிட்டனர்! கதறும் தாய்! அதிர்ச்சியில் கோவை!

மகளை தன்னிடம் இருந்து பிரித்து சென்று வேற்று மதத்திற்க்கு மாற்றியதாக மாவட்ட எஸ்.பி யிடம் கண்ணீர்ருடன் தாயார் கோரிக்கை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் முனிரத்தினம், இவருக்கு திருமணமாகி சில மாதங்களில் மகள் பூங்கோதை பிறந்த பின்னர் கணவர் பிரிந்து சென்றுவிட தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். இதற்கிடையில் தனது சகோதரன் வீட்டில் மகளை தங்க வைத்து படிப்பை தொடர்ந்தார்.

இந்த நிலையில், பொறியியல் படிப்பை முடித்த பூங்கோதை ஊர் ஊராக தங்கி வேலைப்பார்த்து வருவதாக வீட்டில் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை ஒரு மாத சம்பளம் கூட வீட்டிற்க்கு கொடுக்காததை அடுத்து முனிரத்தினம் சந்தேகமடைந்தார்.

இதனை அடைத்து பூங்கோதை தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு நேரில் சென்று விசாரித்த போது, அவர் வேலைக்கு செல்வதில்லை என கூறினர். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வீட்டிற்க்கு வந்த மகள் கழுத்தில் சிலுவை அணிந்து வந்தாதாகவும் இது குறித்த எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல், அமைதியாக இருந்துள்ளார்.

அடுத்த சில தினங்களில் மீண்டுமாக கிளம்பி பூங்கோதை சென்றுவிட நொந்துப்போன தாய் முனிரத்தினம், மாவட்ட எஸ் பி யிடம் நேரடியாக மகளை மீட்டுக்கொடுக்க கோரி மனு அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார், பூங்கோதை விரும்பி மதம் மாறினாரா அல்லது யாரேனும் கட்டாய மதமாற்றம் செய்தனரா என விசாரணை செய்யவுள்ளதாக தெரிகிறது. மேலும் காதல் விவகாரமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடைய எனது மகளுக்கு அவளது நண்பர்கள் போதை பழக்கத்தை கற்றுக் கொடுத்துள்ளதாகவும் இதன் மூலமே அவளை மூளைச் சலவை செய்து மதம் மாற்றியதாகவும் முனிரத்னம் திடுக் புகாரை தெரிவித்துள்ளார்.