வயலில் முட்டை போட்ட பறவை! நொறுக்க வந்த டிராக்டர்! எதிர்த்து நின்று கெத்து காட்டிய தாய் பறவை! உணர்ச்சி மிகு காட்சி!

சீனாவில் விவசாயி ஒருவர் தனது நிலத்தை டிராக்டர் மூலம் உழும்போது அவரது விவசாய நிலத்தில் பறவை ஒன்று தனது முட்டை மற்றும் குஞ்சுகளை காக்க டிராக்டரை எதிர்த்து நின்றதைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்.


சீன மாகாணத்தில் மங்கோலியா என்ற பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம் உலன்காப்  இந்த பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இப்போது சீனாவில் மழைக்காலம் என்பதால் விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் டிராக்டர் மூலம் உழது கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பறவை டிராக்டரின் எதிரே வந்து நின்றது.

உடனே அவர் டிராக்டரை வேகமாக இயக்க பறவை முன்னே வந்து தனது இறக்கைகளை விரித்து தடுத்துள்ளது.

அப்போது அந்த விவசாயி கீழே இறங்கி பார்த்தபோது அங்கு பறவையின் கூடு அதில் குஞ்சுகளும் முட்டைகளும் இருந்தது தனது சந்தையை இணைக்க வரவை போராடுகிறது என அந்தப் பறவையின் துணிச்சலைக் கண்டு அந்த விவசாயி வியந்துள்ளார்.

இந்நிலையில் தனது கேமராவில் அதன் படம் எடுத்த அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதனை வெளியிட்டுள்ளார். இதையடுத்து பறவையின் குஞ்சுகள் பெரிதான பிறகு தான் அந்த நிலத்தை உழுவதாகவும் அந்த விவசாயி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.