பெற்ற மகனுடன் சேர்ந்து செய்ற வேலையா இது சாந்தி? அதிர்ந்த போலீஸ்..! சென்னை பரபரப்பு!

சென்னை வளசரவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாயும் மகனும் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.


44 வயதான சாந்தி என்பவர் 20 வயதான தன் மகன் நாகராஜூடன் சேர்ந்து வளசரவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கைவரிசை காட்டி உள்ளனர். ஒவ்வொரு அலுவலகம், வீடு வீடாக செல்வது. வேலை கேட்பது போல் நடித்து நோட்டமிடுவது. முடிந்தால் அன்றே கிடைக்கும் பொருட்களை திருடுவது என தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

தாய், மகன் என்று ஒன்றாக வந்து வேலை கேட்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை அதே சமயம் சமீப காலமாக வளசரவாக்கம் பகுதிகளில் வீடுகளில் கொள்ளை போவதாக நிறைய புகார்கள் வந்து கொண்டே இருந்தன. இந்த தொடர் கொள்ளை சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார், தனிப்படைகள் அமைத்தனர். இந்நிலையில் சென்னையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது தாயும், மகனும் சேர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, நகை, பணத்தை திருடி கொண்டு இருவரும் வெளியே காட்சிகள் பதிவாகி உள்ளது.

வேலை கேட்பது போலவும், முகவரி கேட்பது போலவும், உதவி கேட்பது போலவும் வந்து திருடுவது இவர்கள் தனித்திறமை. கடைசியாக ஒரு அலுவலகத்திற்குள் நுழைந்துவிட்டு வெளியில் வரும்போது இருவரும் சிக்கிக்கொண்டனர். இவர்கள் காரைக்குடியிலும் இவர்கள் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடம் 8 சவரன் நகைகள், ரூ.75 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாயும், மகனும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.