மாமனாரால் ஏற்பட்ட விபரீதம்! மகனுடன் மருமகள் எடுத்த பகீர் முடிவு! கிருஷ்ணகிரி சம்பவம்!

மாமியாருடன் ஏற்பட்ட சண்டையால் 3 வயது மகனுடன் பெண் ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுராஜ். இவருக்கு ராதா என்ற மனைவியும், பரத் என்ற 3 வயது மகனும் இருக்கின்றனர். ராதாவுக்கும், மாமனார் முனியப்பன் மற்றும் மாமியார் மாதம்மாள் ஆகியோருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. 

இதற்கிடையே நேற்று இவர்களுக்கிடையே குடும்பத்தகராறு உச்சம் அடைந்தால், ஆத்திரமடைந்த ராதா தனது மகனை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். கொத்தூர் அருகே உள்ள ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்த ராதா திடீரென தனது மகன் பரத்துடன் தண்ணீருக்குள் குதித்துள்ளார்.  

அப்போது அந்த வழியாக சென்றவர்கள், ஆற்றில் குதித்து காப்பாற்ற முயற்சி செய்வதற்கு முன்பாக இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடலை மட்டுமே பொதுமக்களால் மீட்க முடிந்தது.  

இச்சம்பவம் குறித்து அருகிலிருந்த காவல்துறைக்கும் ராதாவின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ராதாவின் உறவினர்கள் ராதாவை குழந்தையுடன் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராதாவின் மாமியார், மாமனார் மற்றும் கணவர் சாமுராஜ் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.