மகனுடன் ஒரே பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் தாய்! நெகிழ வைக்கும் காரணம்!

தாயும் மகனும் ஒன்பதாம் வகுப்பில் ஒன்றாக படிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஜார்சகண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள டுனி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. 35 வயதான ரேகாவுக்கு பாதியில் விட்ட படிப்பை மீண்டும் பள்ளியில் தொடர வேண்டும் என நெடுநாட்களாக ஆசை இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக அவருக்கு ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயில அனுமதி கிடைத்தது.

இதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அதே பள்ளியில்தான் ரேகாவின் இரு குழந்தைகளும் படிக்கின்றனர். வியப்பான செய்தி என்னவென்றால் ரேகா படிக்கும் அதே ஒன்பதாம் வகுப்பில் தான் அவரது மகன் சந்தீப்பும் படிக்கிறார். ரேகாவின் மூத்த மகள் ப்ரீத்தி அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அன்றாடம் தனது பிள்ளைகளுடன் பள்ளிக்கு சென்று வருவது தனக்கு புதிய உற்சாகத்தை அளிப்பதாக ரேகா கூறியுள்ளார்.

தனது கணவர் தொடங்கி அனைவரும் தனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாக ரேகா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். படிப்பிற்கு ஆர்வம் மட்டுமே போதும் வயது தேவையில்லை என்பதற்கு ரேகா ஒரு உதாரணமாகத் திகழ்கிறார். மேலும் 36 வயதில் பள்ளி சென்றும் படிக்கும் பெண்மணிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிகின்றன.