சாலையில் மிகப்பெரிய பள்ளம்! தடுமாறி விழுந்த பைக்! மகன் - தாய்க்கு ஏற்பட்ட பயங்கரம்! கோவை அதிர்ச்சி!

கோவை மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மகனுடன் இருசக்ககர வாகனத்தில் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை மரக்கடையை சேர்ந்தவர் நடராஜ், மகேஸ்வரி தம்பதி வசித்து வந்தனர். மகன் சுதர்சனை இருசக்கர வாகனத்தில் தன்னுடைய அம்மா வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு மகேஸ்வரி கூற அவரது மகன் சுதர்சன் அழைத்து சென்றுள்ளார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள் சோமனூர்-அன்னூர் ரோட்டில் வந்த போது ரோட்டின் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் நிலைதடுமாறி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். விபத்தில் மகேஸ்வரி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மகேஸ்வரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். சுதர்சனுக்கு காயம் அடைந்து சிகிச்சைபெற்று வீடு திரும்பினார்.