19 வயதில் திருமணம்! 22 வயதில் விதனை! 5 வயது மகளுடன் இளம் தாய் எடுத்த விபரீத முடிவு!

நீலகிரி மாவட்டம் உதகையில் ஏரியில் மகளுடன் சேர்ந்து தாய் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


உதகையை அடுத்த நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. 2 வருடங்களுக்கு முன்னர் கணவர் இறந்த நிலையில் தன்னுடைய 5 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் குழந்தையுடன் நிர்மலா காணவில்லை என உறவினர்களால் போலீசில் புகார் அளிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். 

இதை அடுத்து சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் உதகை படகு இல்லம் ஏரியில் தாய் மற்றும் குழந்தையின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏரியில் இருந்த 2 உடல்களும் மீட்கப்பட்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அது 2 நாட்களுக்கு முன்னர் மாயமான நிர்மலா மற்றும் அவரது 5 வயது குழந்தை என தெரியவந்துள்ளது.

2 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குழந்தையுடன் தாய் ஏரியில் குதித்து இறந்த தகவல் கேட்டு அப்பகுதி மக்கள் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கணவர் இறந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீஸ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உயிரழந்த நிர்மலாவுக்கு 24 வயது என்பதால் கணவரை இழந்து வாழும் அவருக்கு ஆண்கள் யாராவது தொல்லை கொடுத்தார்களா அல்லது கடன் பிரச்சனையாக என பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.