கல்யாணமாகி 3 வருடம்! குழந்தையும் பிறந்தாச்சு! ஆனாலும் கேட்க கூடாததை கேட்டு கணவன் டார்ச்சர்! இளம் மனைவி எடுத்த பகீர் முடிவு!

அரக்கோணம் பகுதி அருகே வரதட்சணை கொடுமையால் தாயும் மகளும் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அரக்கோணம் பகுதியை அடுத்த மோசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் ரம்யா என்ற பெண்ணுக்கும் சென்ற 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அஸ்வதி என்ற பெண் குழந்தையும் உள்ளது. ரம்யாவின் கணவர் சதீஷ் பெரம்பூர் பகுதியில் அரசு நடத்துனராக பணியாற்றி வருகிறார்.

ரம்யாவின் பெற்றோர் திருமணத்தின் போது அவருக்கு 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் கொடுத்த வரதட்சணை போதாது மேலும் 3 பவுன் நகை வேண்டும் என்று ரம்யாவின் மாமனார் ராஜேந்திரன் மற்றும் மாமியார் தனலட்சுமி ஆகியோர் கொடுமைப் படுத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து நாள்தோறும் இவர்கள் செய்யும் கொடுமைகளை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார் ரம்யா. இதையடுத்து நேற்றைய தினம் தனது கணவர் வழக்கம்போல் வேலைக்கு செல்ல மாமனாரும் மாமியாரும் 100 நாள் வேலைக்கு சென்று விட்டனர். இதையடுத்து வீட்டில் தனது குழந்தையுடன் தனியாக இருந்தார் ரம்யா,

இவர்களிடம் நாளுக்கு நாள் கொடுமையை சந்தித்து வாழ முடியவில்லை ஆகையால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்ததோடு குழந்தையை இவர்களிடம் விட்டுச் சென்றால் அவளையும் கொடுமைப்படுத்த தான் செய்வார்கள் என்று நினைத்துக்கொண்டே முதலில் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு பின் இவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து மாலை வீடு திரும்பிய மாமனாரும் மாமியாரும் கதவை நீண்ட நேரமாக தட்டியுள்ளனர். கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்த அவர்கள் இருவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பேத்தியும் மருமகளும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின் அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து ரம்யாவின் உறவினர்கள் அரக்கோணம் காவல் நிலையப் பகுதியை முற்றுகையிட்டு இதனை தற்கொலை வழக்காக பதியாமல் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் வரதட்சனை கொடுமையினால் தான் தனது மகள் இப்படியான முடிவை எடுத்துள்ளார் என்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அப்பகுதி இளம் கலெக்டர் அவர்களுக்கு இதனை விசாரிக்க உத்தரவு வழங்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் விசாரணை நடத்தி முடித்ததும் விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை உறுதி அளித்த பின் ரம்யாவின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.