தாய் கொல்லப்பட்டது தெரியாமல் தட்டி எழுப்பும் குட்டி காண்டாமிருகம்! நெஞ்சை உலுக்கும் வீடியோ!

தென் ஆப்பிரிக்கா நாட்டின், தாய் காண்டா மிருகம் இறந்து போனது கூட தெரியாமல் குட்டி காண்டாமிருகம் அதனை தட்டி எழுப்ப முய்ற்சிக்கும் காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது.


தென் ஆப்பிரிக்க வனப்பகுதியில் தாய் காண்டாமிருகம் மர்ம வேட்டையாளர்களால் கொல்லபட அதை உணராத குட்டி காண்டா மிருகம் ,தாயை எழுப்ப துடிக்கும் பாசப் போராட்டம் காண்போரை கண்கலங்க செய்கிறது.

கடந்த ஆண்டின் பிப்ரவரி மாதம், வெளியான இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி ஒருவர் இணையத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர, அதனை பலரும் தற்போது வைரலாக பார்த்து வருகின்றனர்.

மேலும் காடுகளில் தனக்கான இயல்பு வாழ்வை மேற்கொள்ளும் விலங்குகளை வேட்டையாட்டுவதன் மூலம் அதன்  உறவுகளை வேதனைக்குள்ளாகுவதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த காட்சிகளின் கருத்து.