பொள்ளாச்சி பெண்ணே வேண்டாம்! அடுத்தடுத்து நிறுத்தப்படும் திருமணங்கள்! அலறும் பெற்றோர்!

பொள்ளாச்சி பெண்கள் வீடியோ விவகாரத்தை தொடர்ந்து அந்த ஊர் பெண்களை நிச்சயம் செய்திருந்த மணமகன்கள் திருமணத்தை அடுத்தடுத்து நிறுத்தி வருகின்றனர்.


பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைகள், அதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்கள், சமூகஊடகங்களில் நடந்த விவாதங்கள் எதிரொலியாக பல நிச்சயதார்த்தங்கள் நின்றுவிட்டன

சில திருமணங்களும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பொள்ளாச்சிப் பொண்ணுகளும் வேண்டாம்; மாப்பிள்ளைகளும் வேண்டாம்’ என்ற மனநிலைக்கு வெளியூர்க்காரர்கள் சிலர் வந்துவிட்டதாகத் தகவல்!

இது வதந்தியாகத்தான் இருக்குமென்று நினைத்துப் பலரிடமும் விசாரித்தால், தங்களுக்குத் தெரியவே சில குடும்பங்களில் மங்கல வைபவங்கள் நின்று போயிருப்பதாகச் சொல்லி, அதிர்ச்சியூட்டினார்கள்!

அங்குள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களையும் சந்தேகப்பார்வையோடு பார்ப்பது, அபத்தம். அதேபோன்று, ஆபாச வீடியோ கும்பலால் சில பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதற்காக, அங்குள்ள பெண்கள் எல்லோரையும் பூதக்கண்ணாடி போட்டுப்பார்ப்பதும், புறக்கணிப்பதும் அபத்தத்தின் உச்சம்.

இந்த ஊருக்கென்று சில மாண்புகள் இருக்கின்றன. ஆபாசப் பொறுக்கிகள் செய்த காரியத்தால், ஊருக்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த ஊர் மக்கள் மனதளவில் மிகவும் நொந்துபோயிருக்கின்றனர்.