காது வலியால் துடியாய் துடித்த இளைஞர்! ஹாஸ்பிடல் சென்றவர்களுக்கு டாக்டர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்!

வியட்நாமில் கொசு நுழைந்து விட்டதால் காது வலியால் அவதிப்பட்டு வந்தவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொசு எடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது.


வியட்நாமில் காதுவலியால் அவதிப்பட்டு வந்த ஒருவர் மருத்துவமனைக்கு சென்றார். காதுக்குள் ஏதோ குடைந்து கொண்டே இருப்பதாகவும், அதனால் காது வலியால் அவதிப்படுவதாகவும் தெரிவித்தார். 

அங்கு அவரின் காதை பரிசோதித்த மருத்துவர்கள் உள்ளே கொசு சென்று விட்டு வெளியில் வர முடியாமல் மாட்டிக் கொண்டதாக தெரிவித்தனர்.

இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த நபருக்கு ஆறுதல் கூறிய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கினர். அந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. காதிற்குள் கொசு சென்று விட்டால் அரிப்பு ஏற்பட்டு பலவித நோய்கள் வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

பொதுவாகவே காதிற்குள் வெளிப் பொருட்கள் ஏதும் உள்ளே செல்ல முடியாதபடிதான் அந்த அமைப்பு இருக்கும். ஏன் எனில் காதில் உள்ள மெல்லிய ஜவ்வு ஸ்பீக்கரில் உள்ள இழைகள் போன்றவை. சிறிது அடிபட்டாலும் காது கேட்கும் தன்மையே இழந்து விட வாய்ப்பு உள்ளது. எனவேதான் காதிற்குள் குச்சி, ஹேர்பின் சாவி போன்றவற்றை விட்டு குடையக் கூடாது. ஈ கொசு போன்றவை மிக சிறியது என்பதால் எளிதில் நுழைந்து ஆட்டம் காண வைக்கிறது.