சசிகலாவுக்கு சிக்கல் மேல் சிக்கல்! காலம் முழுவதும் சிறைவாசம்தானா?

சசிகலாவின் ஆரம்பகாலத்து தோழியான சந்திரலேகா திடீரென சிறைக்குள் சென்று சந்தித்துவந்ததும், சசிகலா விடுதலை ஆகிவிடுவார் என்று ஒரு தோற்றம் உருவானது.


சசியை வெளியே வரவழைத்து, அ.தி.மு.க.வை ஒன்றாக்கும் வேலையில் சுப்பிரமணியம் சுவாமி இறங்கியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், எல்லாமே பழங்கதை ஆகிவிட்டது. 

ஏனென்றால், கர்நாடகா உருவான நவம்பர் 1ஆம் தேதியை முன்னிட்டு 141 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். சசிகலா குறித்து நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் கர்நாடக சிறைத்துறை இயக்குனராக என்.எஸ்.மெக்ரிக் பேசியபோது, ‘‘சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அவர் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார்’ என்று தெரிவித்தார். 

இந்த நிலையில் அவர் சிறையில் இருந்தபோது லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் குறைந்தது 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்தும் பல்வேறு வழக்குகள் வரிசை கட்டி நிற்பதால் காலம் முழுவதும் சசிகலா சிறையில்தான் இருக்கவேண்டி வருமோ என்று அவரது ஆதரவாளர்கள் கலங்குகிறார்கள்.