வீடு தோறும் மாதம் ரூ.1500 ரூபாய்! செம ஹிட் அடிக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை!

வழக்கமாக தி.மு.க. தேர்தல் அறிக்கைதான் பளபளப்பாக இருக்கும். இந்த முறை தி.மு.க.வை தூக்கி சாப்பிடும் வகையில் வீட்டுக்கு 1,500 ரூபாய் மாதம் தோறும் என்று அறிவிக்கப்பட்டதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.


வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர், மாற்றுத்திறனாளிகள், விவசாய கூளித்தொழிலாளர்கள் ,ஆதரவற்ற முதியோருக்கு மாதந்தோறும் 1500 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம்  செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தும் என்று இன்று வெளியான தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. கூறியுள்ளது.

சொன்னா கொடுக்கும் குணம் எடப்பாடிக்கு உண்டு  என்பதால் எல்லா வீட்டுக்கும் நிச்சயம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

இதுதவிர, காவேரி கோதாவரி இணைப்பு திட்டம், புதிய வேலை வாய்ப்புக்கு திறன் மேம்பாட்டுத் திட்டம், வறட்சியை தீர்க்க நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

 தி.மு.க.வை போலவே நீட் தேர்வு விலக்கு, கல்விக் கடன் ரத்து போன்றவையும் தேர்தல் அறிக்கையில் உள்ளது. இதுதவிர, 7 பேர் விடுதலை செய்ய வலியுறுத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

செய்றாங்களோ இல்லையோ, சொல்லவாச்சும் செய்றாங்களே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.