2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அதிசய குரங்கு! மண்டை ஓடு மூலமாக அம்பலமான ரகசியம்!

வாஷிங்டன்: மனித மூளை வளர்ச்சியடைந்தது பற்றிய ஆய்வுக்கு மனித குரங்கின் மண்டையோடு உதவி புரிந்துள்ளது.


ஆண்டிஸ் மலைத் தொடரில் 2 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, பிரைமேட் வகை மனிதக் குரங்கு ஒன்றின் மண்டையோடு அமெரிக்கா மற்றும் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சி குழு கையில் கிடைத்துள்ளது. ஆண்டிஸ் மலைக் காடுகளில், பழங்கள், இலைகளை சாப்பிட்டு வாழ்ந்த அந்த குரங்கின் மண்டையோடு, மனிதர்களைப் போலவே உருண்டையாக உள்ளது.

சிறியதாக இருந்தாலும், அதில், மூளையின் வளர்ச்சிக்கு ஏற்ப தனி அமைவிடம் இருந்துள்ளது. இதன்மூலமாக, மனிதர்களில் மூளை வளர்ச்சி எப்படி படிப்படியாக ஏற்பட்டது என்பதை உணர முடிவதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

பிரைமேட் அல்லது மனிதக் குரங்குகளை 2 வகையாகப் பிரிக்கலாம். மனிதர்கள் பிரிந்து வந்த பழைய உலகத்தைச் சேர்ந்தவை மற்றும் அமெரிக்கா, ஓசியானியா பகுதிகளில் வாழும் புதிய உலகத்தைச் சேர்ந்தவை என்பதே அவற்றின் வகைப்பாடாகும். இதன்படி, இந்த புதிய உலகை சேர்ந்த குரங்களின் மூளையில் படிப்படியான படிம நிலைகள் காணப்படுகின்றன,

இதுதவிர, மூளையின் அளவும் குறைவாக இருந்திருக்கிறது, பரிணாம வளர்ச்சிப் படிநிலையில், மனிதர்களுக்குத்தான் உடலின் தோற்றம் பெரிதாக இருந்தாலும் மூளையின் அளவு குறைவாக மாறியது. இதுபோலவே, இந்த மனித குரங்கின் மூளை அமைப்பும் உள்ளதால், மனித மூளையின் பரிணாம வளர்ச்சிக்கு இது சான்றாக உள்ளதென்று, ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.