மோடி தலைமையில் அமையும் புதிய மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.
மோடியின் புதிய கேபினட்! நிர்மலா சீத்தாராமன் இலாகா பறிபோகிறது!

கடந்த 2014ம் ஆண்டு முதலே பாதுகாப்புத்துறை அமைச்சர் இலாகா சிக்கலுக்கு உரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. மோடி பிரதமராக பதவி ஏற்ற போது பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த அந்த இலாகாவை நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் அருண்ஜேட்லி கூடுதலாக கவனித்து வந்தார். பிறகு கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சரானார்.
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழந்து அதைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அம்மாநில முதலமைச்சர் ஆனார். இதனால் சில காலம் மீண்டும் பாதுகாப்புத்துறை இலாகாவை அருண் ஜெட்லி கூடுதலாக கவனித்து வந்தார். பிறகு நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
தற்போது வரை நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்த நிலையில் மோடியின் புதிய கேபினெட்டில் அமித்ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட இருக்கிறார். இதனால் உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை அமைச்சராக மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் இடமிருந்து பாதுகாப்புத்துறை பறிக்கப்பட்டு ராஜாஜியிடம் ஒப்படைக்கப்படும் என டெல்லியில் பேச்சு அடிபடுகிறது.