சோஷியல் மீடியா பாலோயர்ஸ் எண்ணிக்கை! டிரம்பை காலி செய்த மோடி!

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள அரசியல் தலைவர்களில் உலக அளவில் மோடி 2வது இடத்தை பிடித்துள்ளார்.


பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலங்களை உலகம் முழுவதும் பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர்களில் யாரை அதிகம் பேர் பின் தொடர்கிறார்கள் என செமிரஸ் எனும் நிறுவனம் ஆய்வு நடத்தியது-

இதனை தொடர்ந்து உலகளவில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் அரசியல தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, சுமார் 18 கோடி பாலோயர்ஸ் உடன் முதலிடத்தில் உள்ளார். இவருககு அடுத்த படியாக பிரதமர் மோடியை பேஸ்புக், ட்விட்டரில் சுமார் 11 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பைவிடவும் பிரதமர் மோடியையே அதிகம் பேர் பின் தொடர்கின்றனர். இதன் மூலம் டிரம்பை விட அதிக பாலோயர்ஸ்களை கொண்டுள்ளவர் இந்திய பிரதமர் என்கிற பெருமை கிடைத்துள்ளது.