காந்தி தாத்தாவை திருப்பியும் சுடப்போகுதா பா.ஜ.க? காந்தி பிறந்த நாளில் மோடியின் பாத யாத்திரை!

கோட்சேவுக்கு ஆதரவாக காந்தியின் உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டது ஒரு பா.ஜ.க. பெண் எம்.பி.தான். நேருவையும் காந்தியையும் விடாமல் தாக்கிக்கொண்டிருக்கும் பா.ஜ.க. திடீரென பாத யாத்திரை என்று காந்தியின் கம்பை பிடுங்குகிறார்கள்.


 காந்தி அடிகள் அவர்களுடைய 150வது பிறந்த நாளை முன்னிட்டு காந்தி சங்கல்ப யாத்திரை இந்தியா முழுவதும் நடைபெற இருக்கிறதாம். இந்த மகா சங்கல்ப யாத்திரையில் தேசிய தலைவர் அமித்ஷா செயல் தலைவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் அனைத்து முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும் பாரதிய ஜனதா கட்சி உடைய தொண்டர்களும் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்ட பல்வேறு அமைப்புகள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு மகா பாதயாத்திரையை தமிழகத்தில் நிகழவிருக்கிறது.

தமிழகத்தில் மாநில பொறுப்பாளர் பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் அரசகுமார் தலைமையில் பாத யாத்திரை நடைபெற இருக்கிறது. இந்த பாத யாத்திரைக்கு பாதுகாப்பு வேண்டும் என்று காவல் நிலையத்தில் இன்று மனு கொடுத்திருக்கிறார்கள்.

ஏழெட்டு பேர் நடந்து போறதுக்கு எதுக்கு பத்து போலீஸ் பாதுகாப்பாம்..?