5 ஆண்டுகளில் 55 சதவீதம் உயர்ந்த பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு! வெளியானது அதிர்ச்சி தகவல்!

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.


வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அவரது "கையிருப்பு ரூ. 38,750 மட்டுமே உள்ளது","சொந்தமாக காரோ, இரு சக்கர வாகனமோ இல்லை" என்று மோடி கூறியுள்ளார்.

மோடியின் "அசையும் சொத்து - ரூ. 1.41 கோடி, அசையா சொத்து - ரூ. 1.10 கோடி"  என்று பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களுக்க முன்பு மோடி கொடுத்த சொத்து மதிப்பு 55 சதவீதம் உயர்ந்துள்ளது. 

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ள போதும் அவர் தன்னிடம் காரோ வீடோ இல்லை என்று கூறியுள்ளார். அரசு கொடுத்துள்ள வீட்டையே தானும் தனது தாயும் பயன்படுத்துவதாக மோடி கூறியுள்ளார். மேலும் அரசு கொடுத்த வாகனங்களையே பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அசையும் சொத்துக்கள்

45 கிராம் தங்க நகைகள் இவற்றின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 13 ஆயிரத்து 800 ரூபாய்  குறிப்பிட்டு உள்ளார். அவர் துணைவியார்  ஜசோதாபென். அவருடைய துணைவியார் பெயரில் எந்த ஒரு நகையும் சொத்து மதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்,மொத்தம் அசையும் சொத்துக்களின் மதிப்பு1 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரத்து 119.

அசையா சொத்துக்கள் 

1 கோடியே 10 லட்சம் ரூபாய் அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார் வங்கி கணக்கில் உள்ள தொகை விவரம் 1 கோடியே 27 லட்சத்து 81 ஆயிரத்து574.  தங்க நகைகள் மொத்தம் 45 கிராம் அதன் மொத்த மதிப்பு ஒரு 1லட்சத்து 13 ஆயிரத்து 800 ரூபாய் உள்ளதாக தெரிவித்துள்ளார்அவ்வகையில் கடந்த 2014 ஆண்டில் அவரது மொத்த வருமானம் 9.69 லட்சம். 2015-ம் ஆண்டில் 8.58 லட்சம் ரூபாய்.  2016-ம் ஆண்டில் 19.23 லட்சம் ரூபாய் 2017-ம் ஆண்டில் 14.59 லட்சம் ரூபாய் 2018-ம் ஆண்டில் 19.92 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் அவருக்கு மொத்தம் 2.51 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. தனக்கு கடன்கள் ஏதுமில்லை. பிரதமர் அலுவலகம் மற்றும் வருமான வரித்துறையிடம் இருந்து 2.2 லட்சம் ரூபாய் வரவேண்டிய நிலுவைத்தொகையாக உள்ளது. மற்றபடி தனது பெயரில் சொந்தமாக கார் அல்லது இருசக்கர வாகனம் ஏதுமில்லை என மோடியின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.