பா.ஜ.க. கொண்டுவந்த அத்தனை திட்டங்களுக்கும் மூடுவிழா! சிவசேனா அதிரடியில் டென்ஷனாகும் மோடி!

மகாராஷ்டிரா இந்திய தொழில்துறை சாம்ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ தலைநகரம் அமைந்துள்ள மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மாநிலம் இது.


அதேவேளையில். இங்கு நடக்கும் அரசியல் அமானுஷ்யங்கள், திரைக்கதைகளையும் தாண்டி சுவாரஸ்யம் மற்றும் விருவிருப்பாக பயணிக்கின்றன மாநில அரசியல் தனத்தின் சாணக்கிய நகர்வுகள். ஒரு சமயம் மும்பையின் அரசியல் நிலவரம் பற்றி கருத்து தெரிவித்த சோ. ராமசாமி.

மஹாராஷ்டிராவில் உள்ள எந்த அரசியல்வாதிக்கும் வெட்கமில்லை என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு மஹாராஷ்டிராவின் அரசியல் அமைப்புகள் இயங்கி வந்துள்ளன.

இந்நிலையில் பிஜேபி மற்றும் சிவசேனா தலைமையிலான கடந்த கால ஆட்சியில் தொடங்கப்பட்ட சுமார் 1200 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான ஒப்பந்த விபரங்களை மறு ஆய்வு செய்து வருகிறது சிவசேனா தலைமையிலான அரசு.

ரத்னகிரி எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (RRCPL) மஹாராஷ்டிரா மாநில மற்றும் மத்திய அரசுடன் இணைந்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்க. அப்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸால் அறிவிக்கப்பட்டது இந்த திட்டம். 

சுமார் 3 லட்சம் கோடி முதலீட்டில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டம். 2025ல் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு ஆலையை. அரசு எண்ணெய் விற்பனை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றுமின்றி.

சவுதி அரம்கோ மற்றும் அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனங்கள் இணைந்து ரத்னகிரி சுத்திகரிப்பு நிலையத்தின் 50% உரிமையையும், மீதமுள்ள 50% பங்களிப்பினை இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க‌ ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் . மஹாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட எதிர்பாராத ஆட்சி மாற்றத்தினால், கடந்த‌ 30 ஆண்டுகளாக உற்ற நண்பனாக வலம் வந்த சிவசேனா மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட பிரிவினால்.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. புதிய சட்டப்பேரவை வளாகம். மஹாராஷ்டிரா சட்டப்பேரவை வளாகத்தை. மும்பையின் அடையாளமாக திகழ்ந்து வரும் ஏர் இந்தியா கட்டடத்திற்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

திவால் நிலையில் இருக்கும் ஏர் இந்தியாவின் சொத்துக்களை ஏலம்‌விட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள வேளையில். மும்பையின் பிரதான கட்டிடமாக இருக்கும் ஏர் இந்தியா கட்டிடத்தை விலைக்கு வாங்கி. அதில் மஹாராஷ்டிரா சட்டப்பேரவையை நடத்த திட்டமிட்டிருந்தார் பட்னாவிஸ்.

ஆனால். மக்களின் வரிப்பணத்தை வாரியிரைத்து மத்திய அரசுக்கு கப்பம் கட்ட தயாராக இல்லை என்று கூறியுள்ள புதிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. பழைய இடத்திலேயே சட்டப்பேரவை எப்போதும் போல செயல்படும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே ஏர் இந்தியாவின் இந்த கட்டிடத்தை வாங்க மஹாராஷ்டிரா அரசு சார்பில் ரூ. 200 கோடி ஏல முன்வைப்பு தொகை செலுத்தியுள்ளது.

எல்ஐசி நிறுவனம் சுமார் 1400 கோடி ரூபாய்க்கு இந்த கட்டிடத்தை ஏலம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்.

மாநில கட்சியுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக. பரிதாபமாக ஆட்சியை பரிகொடுத்துள்ள பாஜக கூட்டணியால். கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் தற்போது சிவசேனா தலைமையிலான அரசு தடைவிதித்திருப்பதன் காரணமாக.

இந்தியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட மும்பை அகமதாபாத் முதல் புல்லட் ரயில் திட்டம் நிறைவேறுமா என்பது சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜப்பான் அரசு உதவியுடன் தொடங்கப்பட்ட மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தத் திட்டத்திற்காக உலக வங்கி சுமார் 1.08 லட்சம் கோடி அளவிற்கு கடன் வழங்கி உள்ளது. ஒருவேளை இந்தத் திட்டம் நிறுத்தப்படும் வேலையில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசின் கனவில் மகாராஷ்டிரா அரசாங்கத்தால் போடப்பட்ட முட்டுக்கட்டைகளால். 

மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி மும்பை நாக்பூர் வரை 701 கிமீ உருவாகவுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டம். ஆரே மெட்ரோ கார் ஷெட் திட்டம் மற்றும் மும்பை தானே பசுமை சாலை திட்டங்களையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

சிவசேனா அரசு. மஹாராஷ்டிராவின் ஒட்டு மொத்த முதலீடுகளையும் மத்திய அரசுக்கு சாதகமான திட்டங்களுக்கு பயன்படுத்தியதன் மூலம். மாநில மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தவறியதாகவும்.

இந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 1200 லட்சம் கோடி நிதியை. புதிய திட்டங்கள் மற்றும் மக்களுக்கு செலவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. அடுத்தடுத்து அரசியல் நாடகங்கள் அரங்கேறி வரும் மகாராஷ்டிராவில். கடந்த பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கும் மறுக்கப்பட்டு வரும் இந்த வேளையில். 

உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு அடுத்து எந்த திட்டத்தின் மீது தடை உத்தரவை பிறப்பிக்க போகிறது என்கிற பீதியில், ஒப்பந்ததாரர்களும் அரசியல்வாதிகளும் உறைந்து போயுள்ளனர். 

மணியன் கலியமூர்த்தி