சின்ன அய்யா அன்புமணிக்கு மோடி கொடுத்த பெரிய அசைன்மென்ட்!

சும்மா ஒரு ஃபோட்டோ எடுத்தால் ட்விட்டர்ல போடலாம்,


சும்மா ஒரு ஃபோட்டோ எடுத்தால் ட்விட்டர்ல போடலாம்,வரலாறு முக்கியம்னு நினச்சுத்தான் அவர சந்திக்க போனாராம் சின்னையா,ஆனா அவரை ஒரே அமுக்கா அமுக்கி ஒரு புது அசைன்மெண்ட் குடுத்துட்டாராம் மோடி. அது வேற ஒன்னுமில்ல,வேலூர்ல வெற்றி வேனுமாம்.அதிமுக காரங்களே நாங்க தோத்ததுக்கு காரணம் மோடி எதிர்ப்பு அலைதான்னு சொல்றது அவர ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுதாம்.

மத்தபடி இந்த ஒரு சீட்டு வந்து ஒன்னும் ஆகப்போறதில்ல,ஆனா எனக்கு எதிரான அலை ஏதும் தமிழ்நாட்டுல இல்லைனு காட்டனும்,உங்க கட்சிக்கு செல்வாக்கு உள்ள ஊருதான வேலூர்?.உடனே களத்துல இறங்குங்கன்னு சொல்லிட்டாராம் பி.எம்.என்னடா எதிர்கட்சிக்கார வைகோல்லாம் போறாரேன்னு பாக்கப்போய் இப்படி சிக்கிட்டமேனு தடுமாறி நிக்கிறாராம் சின்னய்யா!.