டைரக்டர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு! அதிர வைக்கும் காரணம்!

இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான கும்பல் தாக்குதல்ககளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழ் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடிதம் எழுதிருந்த நிலையில் தற்போது அவர்கள் மீது தேசத்துரோகம் வழக்கு பதிவு செய்து மத்தியரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


இந்தியாவில் முன்பு இருந்ததை விட தற்போது நாட்டில் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான கும்பல் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் திரைப்பட துறையை சார்ந்த மௌனராகம், அலைபாயுதே, ஓ காதல் கண்மணி போன்ற வெற்றி படங்களை இயக்கிய மணிரத்னம் அனுராக் காஷ்யப், ஷியாம் பெனேகல், ராமச்சந்திரா குகா, அபர்ணா சென் மற்றும் சௌமித்ரா சாட்டர்ஜி போன்ற 49 முக்கிய திரைப்பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுந்தியிருந்தனர்.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரிலுள்ள காவல் நிலையத்தில் மணிரத்னம் உள்ளிட்ட49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணிரத்னம் உள்ளிட்ட49 பிரபலங்கள் மணிரத்னம் உள்ளிட்ட49 பிரபலங்கள் பிரதமரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளதாகவும் முசாபர்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா திரை பிரபலங்கள் பிரிவினைவாத கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். 

அதுமட்டுமின்றி, மனுவை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நீதிபதி உத்தரவின் பேரில் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த திரைப்பிரபலங்கள் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது முசாபர்பூரிலுள்ள சதார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மத்தியரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.