சிதம்பரத்தையும், மாறனையும் மோடியால் டச் செய்ய முடியாது! பாஜக பிரமுகர் கூறும் பகீர் காரணம்!

இந்தியாவில் மோடி என்ன, அந்தக் கடவுளே வந்தால்கூட ஒரு சிலர் மீது கை வைக்க முடியாது என்று பா.ஜ.க. அபிமானி ஒருவர் எழுதியிருக்கும் பதிவுதான் இப்போது அரசியல் ஹாட்.


மோடி அரசாங்கம் இன்னும் ஒரு பத்து வருடம் தொடர்ந்து இப்பொழுது உள்ள நீதிப் பெருச்சாளிகளையும் காங்கிரஸுக்கு விசுவாசமாக உள்ள... மத்திய அரசின் ஊழல் பெருச்சாளி அதிகாரிகளை விரட்டி அடிக்கும் வரையிலும், இவர்கள் எவர் மீதும் மோடியால் கை வைத்து விட முடியாது.இதைத்தான் ரிபப்ளிக் டிவி பேட்டியில் குருமூர்த்தி மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.

நீதித்துறை, குறிப்பாக சென்னை நீதிபதிகள் சிதம்பரம்களுக்கு வெகு அனுசரணையாக இருந்தார்கள் என்றும், அவர்கள் விசாரணையை அனுமதிக்கவே விடவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் சிபிஐ முதல் அனைத்து  துறைகளிலும் லாங்கிரஸின் அடிவருடிகளே அதிகம். 

பல ரிட்டையர்ட் அதிகாரிகள் இங்கு மிகுந்த வன்மமுடன் மோடி கொலை செய்யப்பட வேண்டும் என்று கூசாமல் ஃபேஸ்புக்கில் சொல்லுகிறார்கள் என்றால்... அவர்கள் ஆட்சியில் இருந்தால் எந்த அளவுக்கு காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பார்கள், செயல் படுவார்கள் என்பதை ஊகிக்க முடியலாம்.

இந்த நிலையில் மோடி அரசாங்கம் பெரும் பெரும் ஊழல் வழக்குகளை விசாரிப்பதும், தண்டனை வாங்கித் தருவதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தயாநிதி மாறன்களுக்கும், சிதம்பரங்களுக்கும் உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாய்தாக்களும், தள்ளுபடிகளும், பந்தாடல்களும் நீதிபதிகளின் ஆதரவுகளுடன் நடத்தப் பட்டு வருவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படி கீழேயிருந்து உச்சம் வரை அழுகிப் புரையோடிப் போயிருக்கும் நீதி அமைப்புகளும், அதிகார வர்க்கமும் இருக்கும் பொழுது மோடி அரசாங்கத்தின் எல்லைகள் மிக மிகக் குறைவே

எல்லோரும் மிக எளிதாக மோடி எந்தவொரு ஊழல் குற்றவாளியையும் இதுவரை தண்டிக்க முயலவில்லை என்று சொல்லி விடுகிறோம். ஆனால் அப்படி குறை சொல்லும் அதே ஆட்கள் கார்த்திக் சிதம்பரம் வழக்கில் முட்டுக் கட்டை போடும் நீதிபதிகள் குறித்தோ, அல்லது மாறன்களுக்கு எல்லையில்லா வாய்தாக்களை அள்ளி வழங்கும் நீதிபதிகள் குறித்தோ கண்டனம் தெரிவிப்பதில்லை.

மோடியினால் நீதிபதிகளை எதுவும் செய்ய முடியாது. அவர்கள் கருணாநிதிகளினாலும் சோனியாக்களினாலும் நியமிக்கப்பட்ட அடியாட்கள் மட்டுமே. அவர்களை மீறி எவரையும் தண்டித்து விட முடியாது. மோடி சர்க்காரால் அதிக பட்சம் விசாரணையை முடிந்த அளவில் நடத்தி போதுமான ஆதாரங்களை முன் வைத்து விசாரணை செய்வது மட்டுமே.

அதற்கு மேலாக நீதிபதிகள் அவர்களை விடுதலை செய்து விடுவார்கள் என்பதினால் இந்த நிலை மாறும் வரை அனைவரையும் பல்வேறு விசாரணை கட்டங்களிலும்... அப்படியே விடுதலை ஆனாலும், அப்பீல்கள் மூலமாகவோ தொடர்ந்து பிடியில் வைத்திருந்து காலம் வரும் பொழுது, நேர்மையான நீதி அமைப்பு உருவாகும் பொழுது தண்டனை வாங்கிக் கொடுப்பது மட்டுமே.