2 முறை போன் போட்ட மோடி! 2 முறையும் போனை எடுக்காத மம்தா! காரணம் என்ன தெரியுமா?

ஃபானி புயல் பாதிப்பு குறித்து பேச தொலைபேசியில் இரண்டு முறை அழைத்தும் பேச முடியாது என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார்.


மேற்குவங்க மாநிலத்தின் டம்லக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, பானி புயல் மேற்கு வங்கத்தை தாக்குவதற்கு முன் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் தொடர்பாக பேச முயன்றேன்.  ஆனால் இரண்டு முறை பேச முயன்ற போதிலும் எனது அழைப்பை ஏற்காமல் மம்தா பானர்ஜி நிராகரித்து விட்டார். பானி புயல் பாதிப்பு விவகாரத்திலும் ஆணவத்துடன் மம்தா பானர்ஜி மலிவான அரசியல் செய்கிறார். 

ஆய்வு கூட்டம் நடத்துவது தொடர்பாக மேற்கு வங்க மாநில அரசு அதிகாரிகளிடம் பேச முயன்றேன் ஆனால் மம்தா அதற்கும் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.  மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக மம்தா பதிலடி கொடுத்தார்.

பிஸ்னுபுரில்  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மம்தா,  தேர்தல் நடைபெற்று வரும் இந்த சமயத்தில் ஃபானி புயல் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் நான் ஏன் பங்கேற்க வேண்டும். மோடி ஒரு காலாவதியான பிரதமர். காலாவதியான பிரதமருடன் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள நான் விரும்பவில்லை. இவ்வாறு மம்தா கூறினார்.

பிரதமர் மோடி தொலைபேசியில் இரண்டு முறை அழைத்தும் மம்தா பேசாமல் இருந்தது தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.