ஏப்ரல் 20ந் தேதிக்கு பிறகு ஊரடங்கில் மாற்றம்..! தளர்வு..! மோடி அறிவிப்பின் உண்மை பின்னணி!

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கோரோனா தொற்று நோய் காரணமாக ஒரே மாதிரியான ஊரடங்கு உத்தரவு பிரிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் வரும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் அந்தந்த மாநிலங்கள் நோயின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கை தளர்த்திக்கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். அதில் நாடு முழுவதிலும் ஒரே மாதிரியான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது இன்றுடன் ஊரடங்கு நீட்டிப்பு முடிவடைவதால் மேலும் வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால் ஊரடங்கு வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு நீட்டிப்பானது மருத்துவர்களின் அறிவுரையின்படி எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் எந்த ஒரு தங்கு தடையுமின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மளிகைக் கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் போன்றவைகள் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் ஒரு சில மாவட்டங்களில் வைரஸ் தொற்று குறித்து ஆய்வு செய்யப்பட்டு எந்த ஒரு பாதிப்பும் புதிதாக ஏற்படவில்லை எனத் தெரிந்தால் அந்தந்த மாவட்டங்களில் மட்டுமே ஊரடங்கு நீட்டிப்பு தளர்வு செய்து கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அந்த மாவட்டங்களில் மட்டுமே குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் தொழில்களை இயக்கலாம் மேலும் அனைத்து நிறுவனங்களும் செயல்படாது எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் ஏப்ரல் 20 வரை கடுமையான ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினரிடம் கேட்டு கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கை தளர்த்திக்கொள்ள விரும்பும் மாவட்டங்களின் ஆட்சியர்கள் தமிழ்நாடு அரசுக்கு முறையான அறிவிப்பை கொடுக்க வேண்டும் மேலும் அந்த மாநிலத்தில் புதிதாக எந்த ஒரு கோரோனா தோற்றும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே ஊரடங்கு தளர்த்தப் படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை மிகவும் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.