மோடியும் அமித்ஷாவும் சகுனி, துரியோதனன்! தெறிக்கவிடும் சித்தார்த். ரஜினிக்கும் ஆப்பு!

சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய ரஜினிகாந்த், பா.ஜ.க.வின் கொள்கைகளைப் பாராட்டும் வகையில் மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜூனன் போன்றவர்கள்.


இவர்களில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பதை நான் சொல்ல மாட்டேன். அவர்களுக்கே தெரியும் என்று சொன்னார். ரஜினி சொன்னதையே இப்போது மாற்றிச் சொல்லி தன்னுடைய பெரும் கோபத்தையும் ஆதங்கத்தையும் தெரிவித்து இருக்கிறார் நடிகர் சித்தார்த்.

ஆம், இன்று அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், ‘அவர்கள் கிருஷ்ணனும் அர்ஜூனனும் அல்ல, சகுனியும் துரியோதனனும்தான்.’ என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர், பல்கலைக்கழகங்கள் மீதும் மாணவர்கள் மீதும் தாக்குதலை நிறுத்துங்கள் என்று சீறியிருக்கிறார் சித்தார்த்.

பொதுவாக தங்கள் படத்தின் விளம்பரத்துக்காக மட்டுமே மேடை ஏறி அரசியல் பேசுவது ரஜினி, விஜய் போன்றவர்களுக்குப் பழக்கம். ஆனால், உண்மையான குடிமகனாக தன்னுடைய கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து தெறிக்கவிடும் சித்தார்த் பாராட்டப்பட வேண்டியவர்தான்.