மோடியின் அமெரிக்க விசிட்! டிரம்புக்கு ஓட்டுக் கேட்கப் போகிறாராம்! தேறுவாரா டிரம்ப்?

அடுத்த 2020 நவம்பர் முதல்.வாரத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கப்போகிறது.அமெரிக்காவிம் மோடியான ட்ரம்ப் கொஞ்சம் பயத்தில் தான் இருக்கிறார்.


அமெரிக்க மக்களிடையே எடுக்கப்பட்ட சமீபத்திய சர்வேக்களில் ட்ரம்ப் சரிவைத்தான் சந்தித்து இருக்கிறார். இந்த சமயத்தில் ட்ரம்ப்பை போலவே தீவிர வலது சாரியான மோடியின் அமெரிக்க விஜயத்தை அப்படியே ஓட்டாக்க திட்டம் போடுகிறது டரம்ப் நிர்வாகம்.அதன் முதல் சிக்னல்தான் மோடி அமெரிக்கா வாழ் இந்தியர்களைச் சந்திக்க வைக்கும் ' ஹவ்டி மோடி' நிகழ்ச்சி.

அமெரிக்காவின் ஹூஸ்ட்டன் நகரில் நடக்கும் இந்த் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ட்ரம்பை சந்திக்க குபோகிறார்.இந்தக் கூட்டத்துக் வரும் 

 பெரும்பகுதி இந்தியர்கள் அமெரிக்க ஓட்டுப் போடும் வயதைக் கடந்தவர்கள்.அதனால்தான் ட்ரம்ப் வருகிறார். கடந்த 2016 அதிபர் தேர்தலுக்கு முன்பாக நின்ற போது நியு ஜெர்சியில் 5000 அமெரிக்கா வாழ் இந்தியர்கள் நடுவே ட்ரம்ப் பேசிய போது நான் தேர்வு செய்யப்பட்டால் இந்தியாவின் சிறந்த நண்பனாக இருப்பேன் என்றார்.

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மோடியின் ஹவ்டி மோடி நிகழ்ச்சிக்கு வர 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ட்ரம்ப்புக்கு லாபமே.உள்ளூரில் இழந்த செல்வாக்கை இப்படி வெளிநாட்டு பயணங்களில் சேரும் கூட்டத்தைக் காட்டி சமாளிக்க வேண்டி இருப்பதால் மோடிக்கும் இது லாபமே.

அதனால் இந்த இரண்டு தீவிர வலதுசாரிகளும் ஒருவரை ஒருவர் காப்பாறொ தேர்தல் பிரச்சாரம் மட்டுமல்ல எது வேண்டுமானாலும் செய்வார்கள் என்று நம்பலாம்.