விலை உயரப்போகும்‌ மொபைல் போன் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகள்!

இந்தியாவில் விற்பனையாகும் எலக்ட்ரானிக் பொருட்களை பொறுத்தவரை, சீன பொருட்களின் ஆதிக்கம் அதிகம்.


பிற வெளிநாட்டு நிறுவனங்கள் சந்தையில் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட பொருட்களாகத்தான்  இருக்கின்றன. மேலும் ஜியோமி, விவோ, வோப்போ, வாவே ஆகிய சீன போன்கள் இந்திய சந்தையில் தங்களுக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிறகு, கடந்த சில நாட்களாக சீனாவின் பொருளாதாரம் சந்தித்து வரும் தேக்க நிலையால். பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆக வேண்டிய எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மொபைல் போன்கள் பெருமளவில் தேங்கியுள்ளது.

சீனப் புத்தாண்டை ஒட்டி, அதிகளவில் மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் உதிரி பாகங்களை பல நிறுவனங்கள் இருப்பில் வைத்திருப்பினும், ‘கொரோனா’ வைரஸ் தாக்கத்தால் அவற்றை வினியோகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. சில தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், மிகக் குறைவான ஊழியர்களே வேலை செய்து வருகின்றனர்.

இத்தகைய நிலையால், டிவி பேனல்கள் விலை, 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. நிலைமைகள் சரியாவதற்கு இன்னும் மூன்று மாதங்களாவது தேவைப்படும் என்று தெரிவிக்கின்றனர் தமிழக வணிகர்கள்.எனவே எலக்ட்ரானிக் பொருட்களின் விலைகளில் தாக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என கருதப்படுகிறது.

ஒவ்வொரு 15வது பௌர்ணமி தினத்தன்று சீனாவின் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு எலியின் பெயரால் கொண்டாட தயாராக இருந்த சீன மக்கள் தற்போது வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் சிக்கியுள்ளனர்.

இந்த நிலைமை சீரடைய சுமார் மூன்று மாதங்களாகும் என்று தெரிவிக்கின்றனர் இந்திய இறக்குமதியாளர்கள். எனவே, எலக்ட்ரானிக் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என கூறப்படுகிறது.

மேலும், எலக்ட்ரானிக் பொருட்களின் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும். இதன் காரணமாக, 30 முதல் 35 சதவீதம் அளவிற்க்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் இந்தியா மற்றும் மற்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆக வேண்டிய மொபைல் போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் சீனாவிலேயே தேக்கமடைந்துள்ளன.

மேலும் ஏசி மற்றும் ரெப்ரிஜிரேட்டர் ஆகியவற்றின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் தொழில்துறை உற்பத்தி முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில். இந்தியாவில் மொபைல் இறக்குமதி 50 சதவீதம் குறைந்துள்ளது.

இதே நிலை நீடித்தால். இன்னும் சில நாட்களில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு.

மணியன் கலியமூர்த்தி