ரஜினி, ஸ்டாலின், சீமான், தினகரன்! 4 பேரையும் கிழித்து தொங்கவிட்ட கமல்!

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல் நடிகர்கள் ரஜினி, ஸ்டாலின் மற்றும் தினகரனை மிக கடுமையாக விமர்சித்தார்.


மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செட்டிநாட் வித்யாஸ்ரம் பள்ளியில் ரோட்ராக்  விழாவில் பங்கேற்றார். அப்போது மேடையில் மாணவர்கள் மத்தியில் கமல் பேசியதாவது, அரசியல் மாணவர்களுக்கு தேவையில்லை என்று சொல்வதை ஏற்க மாட்டேன்.

மாணவர்களை போல நாட்டில் அனைவருக்கும் அரசியல் தேவை. சாதி பெருமை பேசக்கூடாது என வீட்டில் கற்றுக்கொடுத்தார்கள். அதற்காக பெருமைபடுகிறேன். சாதி பெருமை பற்றி பேசாமல் இருந்தாலே கலவரம் குறையும்.

நான் தமிழன்டா என்று சொல்லக் கூடியவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்? தமிழகம் தள்ளாடி நடந்து கொண்டு இருக்கிறது.  அரசியலில் எதுவும் சரியில்லை அதனை சரி செய்ய வேண்டும், தாமதமாக அரசியலுக்கு வந்தற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

எந்த நாய் வேண்டுமானாலும் வீட்டுக்கு உள்ளே வரலாம், ஆனால் திருடர்கள் அப்படி இல்லை, என்றார். தலைவர்களை தேடாதீர்கள். தலைவர்களை உருவாக்குங்கள்

சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக்கொண்டு தான் வெளியில் வருவேன். தமிழன் என்று சொல்வது பெருமையல்ல. அது அடையாளம் மட்டுமே.

தமிழனாக இருந்து என்ன செய்தீர்கள்.என்பது தான் பெருமை. மாறிக்கொண்டிருப்பதே கலாச்சாரம். மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் வாழ வேண்டும், சரியானதை செய்வது தான் நடு நிலை. அதற்கு என்ன சாயம் பூசினாலும் சரி.

சபரிமலைக்கு நான் போனதில்லை. அதனால் நான் சபரிமலை விவகாரம் குறித்து கருத்து சொல்லவில்லை. அய்யப்பனின் மரபணுவிலேயே பல பெண்கள் இருக்கின்றனர். சபரிமலைக்கு பெண்கள் வந்தால் வருவாய் அதிகரிக்கும். அய்யப்பனும் அதை தான் விரும்புவார்.

கூட்டணி என்னும் கருப்புக் குட்டைக்குள் எனது புது காலினியை அழுக்காக்க விரும்பவில்லை. கிராம சபை என்ற ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியாதா? ஒரு சின்னப்பையன் அதை செய்தை பின் நீங்கள்.செய்கிறீர்களே? வெட்கமாக இல்லையா?

அரசியலில் என்ன செய்யக்கூடாது என்பதை எனக்கு முன்பாக அரசியலில் உள்ளவர்கள் கற்றுக்கொடுத்தனர். அரசியலுக்கு வந்த போது எனக்கு முன்பாக அரசியலில் உள்ளவர்கள் காமன் சென்ஷ் கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை  கண்டு அதிர்ந்தேன்.

அரசியல் கட்சி தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்வது நல்லதல்ல. மைதானத்தில் சண்டையிட தயாராகிவிட்டு சண்டையிட மாட்டேன் என்று சொல்வது சரியல்ல.  இவ்வாறு மேடையில் கமல் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய கமல், டிடிவி தினகரனுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வருகிறதே என்ற கேள்விக்கு அந்த தகவல் உங்களுக்கு வேண்டுமானால் நல்ல தகவலாக இருக்கலாம் ஆனால் எனக்கு அல்ல என்று பதில் அளித்தார்.

கூட்டணியில் இடம் பெற முடியாததால் திமுகவை விமர்சிக்கவில்லை. ,மறைமுக அல்ல நேரடியாகவே தி.மு.கவை விமர்சிக்கிறேன். அதற்கு காரணம் தி.மு.க தான். இவ்வாறு கமல் பேசினார்.

என்னை பார்த்து கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்களே வெட்கமாக இல்லை என்று கேட்டதன் மூலம் ஸ்டாலினையும், மேலும் சட்டசபையில் சட்டை கிழிந்தாலும் அப்படியே வெளியே வரமாட்டேன் என்று கூறியும் ஸ்டாலினை கமல் கடுமையாக விமர்சித்துள்ளார். இதே போல் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது முறையல்ல என்று கூறியதன் மூலம் ரஜினினையும் கமல் விமர்சித்துள்ளார்.

மேலும் தமிழன் என்று சொன்னால் மட்டும் போதாது? தமிழர்களுக்கு ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று கூறி சீமானையும், தினகரன் உடன் கூட்டணி குறித்து பேசுவதாக வெளியான தகவலே மோசமான தகவல் என்று கூறியிருப்பதன் மூலம் தினகரனையும் கமல் விமர்சித்துள்ளார்.