ஒரு பேப்பருக்கு ரூ.3000 தான்! ச்சீப் ரேட்டில் விற்கப்படும் டிகிரி! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பரிதாபங்கள்!

தொலை தூர கல்வி மூலம் கல்லூரிக்கு வராமலேயே பட்டபடிப்பு விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.


நெல்லை மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் மூலம் தொலைதூரக் கல்வி நிறுவனங்களாக அங்கீகாரம் பெற்றுள்ள நிறுவனங்களின் மூலம் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு கல்லூரிக்கு வராமலேயே பணம் மட்டுமே செலுத்தி பட்டப்படிப்பை தனியார் நிறுவனங்களின் மூலம் பெற்றுத் தருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் அந்த தனியார் நிறுவனங்கள் மாணவர்களை நீங்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் மேலும் அங்கு சென்று ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடங்களையும் படிக்க வேண்டாம் எங்களது நிறுவனத்தில் சேர்ந்தால் மட்டுமே போதும் பட்டப்படிப்பை நிச்சயம் என விளம்பரம் செய்து மாணவர்களை தங்களின் பக்கம் ஈர்த்துவருகின்றனர். இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் மூலம் அங்கீகாரம் பெற்ற தனியார் ஏஜென்சிகள் அதிகமானவர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் வீட்டிலிருந்தே பட்டப்படிப்பு முடிக்கப்படும் இல்லத்தரசிகள் ஆகியோர்களை குறிக்கோளாக வைத்து இந்த ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.மேலும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அனைவருமே தனியார் ஏஜென்சி மூலம் தொலைதூரக் கல்வியை தொடர ஆர்வம் காட்டுகின்றனர்.ஏனெனில் அவர்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் மற்றும் அங்கு சென்று நேரத்தை வீணடிக்க தேவையில்லை நேராக தேர்வுக்கு மட்டுமே சென்று தேர்வு எழுதி பட்டம் பெறுகின்றனர்.

இந்நிலையில் தேர்வு மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தேர்வு மையத்தை தெரிவித்தாலும் அங்கு பணியாற்றும் தேர்வு மைய கண்காணிப்பாளர்களை தனியார் நிறுவனங்களே முடிவு செய்கிறது. இந்நிலையில் ஒரு பேப்பருக்கு 3000 ரூபாய் கொடுத்தால் போதும் தேர்வு மையத்திற்குள் புத்தகத்தை எடுத்துச் செல்ல தனியார் நிறுவனம் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கின்றனர்.

மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் வெறும் 40 மதிப்பெண்களுக்கும் மட்டுமே காப்பி அடிக்க முடியும் மேலும் முழு மதிப்பெண்கள் பெற்றால் சந்தேகம் ஏற்பட்டு விடும் என்கிறார்கள் தனியார் நிறுவனம் ஏஜென்சி. இந்நிலையில் நெல்லையில் செயல்பட்டு வரும் நர்மதா பயிற்சி மையம் என்ற நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் இவை அனைத்தையும் தாமாகவே முன்வந்து ஒப்புக்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து மனோன்மணியம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் பிச்சுமணியிடம் கேட்ட போது அதற்கு அவர் இந்த மாதிரியான போலி தனியார் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் குற்றம் உறுதி செய்யப்பட்டால் தனியார் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அனைத்து குற்றச்செயல்களில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களை ஒப்புதலை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்குச் சென்று பட்டப் படிப்பை பயின்று வரும் மாணவர்களின் மத்தியில் கல்லூரி செல்லாமலேயே பெரும் பணம் மட்டுமே செலுத்தி பட்டப்படிப்பை நிற்கும் இந்த தனியார் நிறுவனங்கள் விரைவில் மூடப்பட வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.