இரவில் திண்ணை பிரச்சாரம்! பெண் வாக்காளர்களை கவர ஸ்டாலின் பலே பிளான்!

ஓசூர் அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரவில் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக அப்பகுதி பெண்கள் அவரை கன்னட மொழியில் பாட்டுப்பாடி வரவேற்றனர்.


திண்ணைப் பிரச்சாரத்தில், ஓசூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா மற்றும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, பத்தலப்பள்ளி கிராமத்தில் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.▪