ராமதாஸை ஓடஓட விரட்டும் ஸ்டாலின்..! ரோஷம், மானமுள்ள ராமதாஸ் என்ன சொல்லப்போறார்..? எதிர்பார்க்கும் தமிழகம்!

ராமதாஸின் குற்றச்சாட்டுக்குப் பதில் சொன்ன ஸ்டாலின், ‘முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை, அதை பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் அரசியலில் இருந்தே வெளியேறுகிறேன்’ என்று சொன்னார். அதன்பிறகாவது ராமதாஸ் அமைதியாக இருந்திருக்கலாம்.


அதற்கு தாய் பத்திரம் இருக்கா, தந்தை பத்திரம், பெரியப்பா பத்திரம் இருக்கா என்றெல்லாம் மீண்டும் ஒரு ட்வீட் விட, அதற்கு பதில் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். இதோ ஸ்டாலின் போட்டிருக்கும் பதிவு.  

முரசொலி அலுவலகம் தற்போது இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை மருத்துவர் அய்யா ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம்' என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாக பதிவு கொடுத்தேன்.

"அவர் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார்; இதை பஞ்சமி நிலம் என அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அவர் கூறியது பச்சைப் பொய் என்பதை ஊர்ஜிதம் செய்தால் அவரும், அவரது மகன் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத் தயாரா என அறைகூவல் விடுத்திருந்தேன்.

நான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார்! மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! நான் தயாராக இருக்கிறேன்!

விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல் இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். ராமதாஸ் ரோஷக்காரர், மானஸ்தன் என்றெல்லாம் வேடிக்கை காட்டும் பாட்டாளிகள், அவரை இழுத்துக்கொண்டு எப்படியாவது முன்னே வரவும்.