மகன் துரை தயாநிதியின் ரூ.40 கோடி சொத்து சுவாகா! அதிர்ச்சியில் மு.க. அழகிரி!

கிரானைட் முறைக்கேடு வழக்கில் முக.அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரிக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


ஒலிம்பஸ் கிரானைட்டின் நிறுவனத்தின் பங்குதாரர் துரை தயாநிதி, மற்றும் தி.மு.க பிரமுகர் சூடாமணியின் மகனான நாகராஜன் ஆகியோர், மதுரை மேலூர் கீழ்வளவு அருகே அம்மன் கோவில்பட்டி என்கிற இடத்தில் 3 ஏக்கர் நிலத்தில் கிரானைட் குவாரி அமைத்து 2007 முதல் 2009 வரை கிரானைட் வெட்டி, அரசு கனிமவள நிறுவனத்திற்கு கொடுக்கும் முகவர்களாக செயல்பட்டனர்.

ஒப்பந்த காலம் முடிந்த பிறகு சட்ட விரோதமாக 2000 கன மீட்டர் பரப்பளவு வெட்டி எடுத்தது ஒலிம்பஸ் நிறுவனம் முறைக்கேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைக்கேட்டின் மூலம் 257 கோடி அரசு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனடிப்படையில்  சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை ஒலிம்பஸ் நிறுவன பங்குதாரர்களான துரை தயாநிதி மற்றும் நாகராஜன் மீது வழக்கு செய்தது.

இந்த நிலையில் சென்னை மற்றும் மதுரையில் ஒலிம்பஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 25 அசையும் அசையா சொத்துகளோடு, வைப்பு நிதி உட்பட 40.43 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளது.