3 மாத தேடல்! கடத்தல்காரியிடம் இருந்து பெற்ற தாயிடம் வர மறுத்த ஹரிணி! ஏன் தெரியுமா?

கடத்தப்பட்ட தனது மகள் ஹரினியை மூன்று மாதங்களாக தேடி அழைந்து கண்டுபிடித்த நிலையில் அவள் பெற்ற தாயிடம் வரமறுத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


காஞ்சிபுரம் திருப்போரூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி காளியம்மாள். நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இவர்களுக்கு ஹரினி என்கிற 2 வயது குழந்தை உள்ளது. ஊசி, பாசி மணி விற்பது தான் வெங்கடேசன் – காளியம்மாள் தம்பதியின் வேலை. கடந்த அக்டோபர் மாதம் திருப்போரூரில் இவர்கள் ஊசி, பாசி மணி விற்றுள்ளார்கள்.

   இரவாகிவிட்டதால், திருப்போரூர் காவல் நிலையம் எதிரே படுத்து உறங்கியுள்ளனர். நள்ளிரவில் கண்விழித்த காளியம்மாள் தனது குந்தை ஹரினியை காணாமல் பதறியுள்ளார். அக்கம்பக்கத்தில் தேடியும் ஹரினி கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஹரினியை கண்டுபிடிக்க கரூரை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டது.

   ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் இருந்து ஹரினி குறித்து தகவல்கள் வந்தது. ஆனால் அந்த தகவல்கள் அனைத்துமே பொய்யாக இருந்தது. முதலில் ஹரினி கொல்கத்தாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை உண்மை என்று நம்பி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சந்தோஸ் ஹதிமானி நேரடியாக கொல்கத்தா சென்று ஏமாற்றத்துடன் திரும்பினார்.

   பின்னர் ஹிரினியை மதுரையில் பார்த்ததாக சிலர் கூறினர், அங்கும் சென்று ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதானது. அண்மையில் கூட மும்பையில் ஹரினி இருப்பதாக ஒரு தகவல் பரவியது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் மும்பை சென்று வழக்கம் போல் வெறும் கையுடன் திரும்பினர். இந்த நிலையில் குழந்தை கடத்தப்பட்ட திருப்போரீல் அணைக்கட்டு எனும் பகுதியில் உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.

   உடனடியாக அங்கு சென்ற போலீசார் 2 வயது மதிக்கத்தக்க குழந்தை அங்கு இருப்பதை பார்த்து அந்த குழந்தையை வைத்திருந்த பெண்ணையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். சங்கீதா என்ற அந்த பெண்மணி குழந்தை தன்னுடையது என்று கூறி சண்டைக்கு வந்தார். ஆனால் அங்கு வந்த வெங்கடேசன் – காளியம்மாள் தம்பதி குழந்தை தங்களுடையது என்று கூறி அங்க அடையாளங்களை கூறினர்.

   ஆனால் அப்போது தான் திடீர் திருப்பம் ஏற்பட்டது. 2வயது குழந்தை அம்மா என்று சங்கீதாவை அழைத்தது. மேலும் சங்கீதாவுடன் தான் செல்வேன் என்று அழ ஆரம்பித்தது. காளியம்மாளிடம் செல்ல அந்த குழந்தை  மறுத்தது. இதனால் போலீசாருக்கே அந்த குழந்தை ஹரினி தானா என்று சந்தேகம் எழுந்தது. இதன் பிறகு சங்கீதாவின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை போலீசார் விசாரித்தனர்.

   அப்போது கல்யானம் ஆகி ஏழு ஆண்டுகளாக சங்கீதாவுக்கு குழந்தை இல்லை என்றும் சில நாட்களுக்கு முன்னர் குழந்தையுடன் வந்து தனது உறவுக்கார குழந்தை என்று கூறியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் சங்கீதாவை போலீசார் விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்துள்ளனர். அப்போது குழந்தை தன்னுடையது இல்லை என்றும் குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால் 5 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த குழந்தையை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

   ஆனால் இதில் என்ன விநோதம் என்றால் மூன்று மாதங்களில் ஹரினி, அந்த சங்கீதாவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டுவிட்டது. பெற்ற தாயராக இருந்தாலும் காளீஸ்வரியை மறந்துவிட்டது. இதனால் சங்கீதாவை பிரிந்து வர மறுத்து ஹரினி அழுது கொண்டே இருந்தது. பின்னர் காளீஸ்வரி குழந்தையை தூக்கிச் சென்று சமாதானம் செய்த பிறகே பிரச்சனை முடிவுக்க வந்தது.

   ஹரினியை கடத்திய நபர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டான். குழந்தையை விலைக்கு வாங்கிய சங்கீதாவும் கைத செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். என்ன தான் கடத்தல்காரியாக இருந்தாலும் 3 மாதங்கள் ஹரினியை அவள் கவனித்துக் கொண்ட விதம்தான் பிரிந்து செல்ல குழந்தை மறுத்ததற்கு காரணம் என்று போலீசாரே கூறினர்.