காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் 85 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் திட்டம் - அமைச்சர் சேவூர்.எஸ்.ராமசந்திரன் தொடங்கி வைத்தார்

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் தமிழகத்தில் 85 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் திட்டப் பணியை அமைச்சர் திரு.சேவூர்.எஸ்.ராமசந்திரன் அவர்கள் திருவண்ணாமலையில் இன்று (மார்ச் 15) தொடங்கி வைத்தார்.


 இதற்கான தொடக்க விழா பள்ளிக்கொண்டாப்பட்டு அருகே உள்ள மகாத்மா பசுமை இந்தியா திட்ட நாற்றுப்பண்ணையில் (ஈஷா நர்சரியில்) நடைபெற்றது. விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.சேவூர்.எஸ்.ராமசந்திரன் அவர்கள் பங்கேற்று விதைகளை தூவி மரக்கன்று உற்பத்தியை தொடங்கி வைத்தார். 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.அருள் செல்வம், வேளாண் துறை முன்னாள் அமைச்சர் திரு.அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் திரு.எம்.பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ரப்யா விருந்தினர்களை வரவேற்று திட்ட விளக்க உரை ஆற்றினார்.